மார்கழி மாத தேய்பிறை சஷ்டியில் கோடீஸ்வரனாகும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
மார்கழி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமை ஆகியவை மிகவும் சிறப்புடையதாகும். அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டி மிக மிக உத்தமமான நாளாகும்.
இந்த நாளில் எவர் ஒருவர் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு, முருக தரிசனத்தை பெறுகிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய ஏற்றம் ஏற்படும்.
சிறப்பான இந்த தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பதால் வாழ்வில் எவ்வாறு கோடிஸ்வர யோகத்தை பெறலாம் என நாம் இங்கு பார்ப்போம்.
2024 மார்கழி மாத தேய்பிறை சஷ்டியானது டிசம்பர் 21ம் திகதி சனிக்கிழமையான இன்று வருகிறது. சஷ்டி திதி, பூரம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதாலல் இது முருகப் பெருமானின் அருளுடன், அளவில்லாத செல்வத்தை அள்ளித் தரக் கூடிய உன்னதமான பலன் தரும் நாளாக அமைகிறது.
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுவது சஷ்டி திதியாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை சஷ்டி திதி வருவதுண்டு.
இவை இரண்டுமே முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், நம்முடைய எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கும் விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாட்களாகும்.
இருந்தாலும் சஷ்டி திதி, சில குறிப்பிட்ட மாதம், கிழமை, நட்சத்திரம் ஆகியவற்றுடன் சேர்ந்து வரும் போது அது அதிக சிறப்பையும், அளவில்லாத பலன்களையும் தருவதாகவும் மாறி விடுகிறது.
காலையிலேயே முருகப் பெருமானுக்குரிய வழிபாடுகளை செய்து விட வேண்டும். வீட்டின் பூஜை அறையில் வெற்றிலையில் தீபம் ஏற்றுவது, ஷட்கோண கோலமிட்டு தீபம் ஏற்றுவது, வேல் பூஜை, வேல் வழிபாடு செய்வது ஆகியவை முருகப் பெருமானின் நிறைவான அருளை தரும்.
அதோடு முருகனிடம் முன் வைத்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். பூரம் நட்சத்திரம் என்பதால் பால் அல்லது பால் பாயாசம் போன்ற பால் சார்ந்த பொருட்கள் அல்லது இனிப்பு வகைகள் படைத்து, விளக்கேற்றி வைத்து வழிபடுவதால் மகாலட்சுமியின் அருட்கடாட்சத்தால் கோடீஸ்வரனாகும் யோகம் ஏற்படும்.