மார்ச் மாத ராசி பலன்
மார்ச் மாதத்தில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள்.
செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன.
நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப் பொறுத்து கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கடகம்
மார்ச் மாதத்தில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அஷ்டமத்து சனியால் சில பாதிப்புகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். பொறுமையும் நிதானமும் தேவை. வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளுடன் தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்வது நல்லது.
மாத பிற்பகுதியில் தடைகள் சங்கடங்கள் உண்டாகுவதோடு கிரகங்கள் கூட்டணி சாதகமாக இல்லை. ராகு உடன் இணையும் சுக்கிரன் திருமண முயற்சிகளில் சில தடைகளை ஏற்படுத்துவார்.
வைகாசி மாதம் வரைக்கும் பொறுமையாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து நீங்கும்.
உறவுகளுடனும் கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். ஆழ்ந்து படிப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது பாதிப்புகள் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த மாதம் விபரீத ராஜயோகம் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் எதிர்ப்புகள், தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையே போர்க்களம்தான் போராடிதான் ஜெயிக்க வேண்டும். பண வரவு தடைகள் இன்றி கிடைக்கும்.
மாத பிற்பகுதியில் சூரியன் எட்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி குரு உடன் இணைகிறார். சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி ராகு உடன் ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார்.
கணவன் மனைவி இடையேயான பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை. பேச கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கால கட்டமாக இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சனியின் பார்வையில் இருப்பதால் சரியான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
இரவு நேர வாகன பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனமாகவும் அக்கறை காட்டுவது அவசியம்.
கன்னி
மாத முற்பகுதியில் பண வருமானம் நன்றாக இருக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலை செய்யும் இடங்களில் போட்டி பொறாமைகளை நிறைய எதிர்கொள்வீர்கள் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் முதலீடுகள் கவனமாக இருப்பது நல்லது. சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். சுக்கிரன் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் பணம், நகை போன்றவைகளை கவனமாக கையாளுவது நல்லது.
மாணவர்கள் சாதனை புரியும் மாதம் தேர்வுகளை சந்தோஷமாக எதிர்கொள்வீர்கள். சுப கிரகங்களின் பார்வையில் இருப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு அற்புதமான மாதம். நினைத்தது நிறைவேறும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் உணவு விசயத்தில் கவனம் தேவை. வயிறு பிரச்சினை வரலாம் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.