யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டதால் பதற்றம்!(video)
யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய தகவல்
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இலங்கையின் 75 சுதந்திர சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ்.நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.