மட்டக்களப்பு பாசிக்குடா கிணறால் பலரும் அச்சம்
இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன இடங்களுள் மட்டக்களப்பு பாசிக்குடாவும் ஒன்றாகும்.
இந்நிலையில் பாசிக்குடா கடற்கரையோரம் அமைந்துள்ள பெரிய கிணறு ஒன்றினால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இக் கிணறு உயரம் குறைவான நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் சிறுவர்கள் கிணற்றின் அருகில் செல்வதும், அதனை எட்டிப் பார்ப்பதுமாக உள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்கள் தவறி விழுந்து விடுவார்களோ என்று அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றனர்.
எனவே இவ்வாறு பாதுகாப்பு இல்லாத வகையிலுள்ள கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து புனர்நிர்மாணம் செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.