ஒரே வாரத்தில் நாட்டில் இத்தனை எரிவாயு வெடிப்பு சம்பவங்களா?...வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 430 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் தீப்பற்றல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெடிப்பு குறித்த விசாரணையின் தகவல்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தொடக்கம் முதல் கடந்த நவம்பர் 28ஆம் திகதி வரையில் மொத்தம் 28 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் கடந்த 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரையிலான இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 430 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவங்களில் அதிகப்படியான வெடிப்பு சம்பவங்கள் கடந்த 3 ஆம் திகதியே இடம்பெற்றுள்ளன. அநாட்ராய தினத்தில் மட்டும் சுமார் 142 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலத்தில் எரிவாயு நிறுவனங்களினால் உரிய அளவிலான இரசாயணம் உள்ளடக்கப்படும் என அந்த குழு கூறியுள்ளது.
எதிர்வரும் காலத்தில் எரிவாயு கசிவு ஏற்படும் பட்சத்தில், அது குறித்து பொது மக்கள் இலகுவாக அறிந்துக்கொள்ள முடியும் என அந்த குழு குறிப்பிட்டது.