திஸ்ஸ குட்டியாராச்சி மீது மனோகணேசன் காட்டம்
பெண்கள் தொடர்பில் அவதூறாக பேசிய திஸ்ஸ குட்டியாராச்சி எம்பி தொடர்பில் மனோ கணேசன் சினம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில்,
திஸ்ஸ குட்டியாராச்சி எம்பியின், பெண்கள் தொடர்பிலான காட்டுமிராண்டி நடத்தை என சாடிய மனோகணேசன், தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை கண்டிக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
அதோடு இலங்கை ஜனத் தொகையில் பெரும்பான்மையினரான பெண்களை தள்ளி வைத்து இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டிக்க இன, மத, மொழி, அரசியல் பேதங்களைகளை மறந்து ஒன்றுபடுவோம் எனவும் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.