சிங்களத்தை ஏற்க மறுத்த மனோகணேசன்!
விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால் அதனை ஏற்க மனோகணேசன் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசனுக்கு, அழைப்பாணையையே மனோணேசன் திருப்பி அனுப்பியுள்ளார்.
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜானாதிபதி கோட்டாபாயவினால் குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமது இல்லத்துக்கு, கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால் அதனை ஏற்க மனோகணேசன் மறுத்துள்ளார்.
அதோடு , குறித்த அழைப்பாணையை தமிழ் மொழியில் அனுப்புமாறும், அதுவரை அதை ஏற்று தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும் அவர் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சல் பதில் கடிதத்தை, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மனோ கணேசன் எம்.பி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது.