மன்னாரில் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
மன்னார் – பள்ளிமுனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக ஒவ்வெரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்கான மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றன.
குடும்ப அட்டைகள் வழங்கப்படாத, இல்லாத நபர்களுக்கு கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னரே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில், செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாலரால் அப்பகுதியில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன், பொலிஸாரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.