நாளை முதல் பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; மீறினால் அபராதம்
மாகாணத்துக்குள் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுதல் அவசியம் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்துக்கு ஒத்துழைப்பை வழங்க மறுக்கும் பயணிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மடங்கு அபராதம்
தற்போது, பயணச்சீட்டை வழங்கத் தவறும் நடத்துநர்களுக்கு 750 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை(01) முதல் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு 100 ரூபாய் அபராதம் மற்றும் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்தில் குறித்த அபராத தொகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு மற்றும் உரிமம் 2002 விதிமுறைகளின் கீழ் மீண்டும் ஆரம்பமாகும் என ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் செல்லுபடியாகும் அனுமதிகளை வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த விதிகளின் முக்கிய நோக்கம் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.