மண்டாடி திரைப்படம்; இலங்கையில் ரசிகர்களுடன் நடிகர் சூரி கொண்டாட்டம்!
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவானது.

ஏற்கனவே, ரூ. 125 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம் இன்னும் சில நாள்களில் ரூ. 150 கோடியை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் மண்டாடி படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கு சென்றிருக்கும் நடிகர் சூரி ரசிகர்களுடன் திரையரங்கில் மண்டாடி திரைப்படம் பார்த்தார்.
அப்போது சாலைகளில் கூடியிருந்த இலங்கை வாழ் தமிழர்கள் சூரிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்