திரைதுறையினருக்கு மற்றுமொரு துயரம்; மனதை திருடி விட்டாய் இயக்குனர் மரணம்
பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மனதை திருடிவிட்டாய் திரைப்பட இயக்குநர் திடீரென உயிரிழந்த சம்பவம் திரைதுறையினருக்கு தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் நடிப்பில் வெளியான 'மனதை திருடி விட்டாய்' படத்தை இயக்கியவர் ஆர்.டி.நாராயண மூர்த்தி (வயது 59). இந்த படத்தில் இடம் பெற்ற பிரபுதேவா, வடிவேலு, விவேக் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிக்கும்படியாக உள்ளது.
அடுத்ததாக ஒரு பொண்ணு, ஒரு பையன் படத்தை நாராயணமூர்த்தி இயக்கி இருந்தார். தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கி உள்ளார்.
இயக்குனர் நாராயணமூர்த்திக்கு கடந்த வாரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வார காலமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 மணியளவில் இயக்குனர் நாராயண மூர்த்தி காலமானார்