அங்கிள் என அழைத்தது தப்பா? 18 வயது பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர்!
அங்கிள் என அழைத்ததற்காக 18 வயது பெண்ணை 35 வயது கடைக்காரர் சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இஎதியாவில் இடம்பெற்றுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் டவுனில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மோகித் குமார் என்ற 35 வயது நபர் காதிமா சாலையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கடையில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி நிஷா அகமது என்ற 18 வயது பெண் பட்மிண்டன் ராக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்று பார்த்த போது தான் அந்த ராக்கெட்டின் ஸ்டிரிங்குகள் உடைந்திருப்பதை அவர் பார்த்திருக்கிறார்.
இதனையடுத்து அதனை கடையில் மாற்றி வருவதற்காக கடந்த டிசம்பர் 21ஆம் திகதி அவர் மோகித் குமாரின் கடைக்கு சென்றுள்ளார் . இதன்போது கடைக்காரரான மோகித்தை, அப் பெண் அங்கிள் என அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர் மோகித், அப்பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.
அவரின் தாக்குதலில் அப்பெண்ணுக்கு தலையில் பலத்த காயமடைந்து யுவதி மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆதரவுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீசார் தாமாக முன்வந்து கடைக்காரர் மோகித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேவேளை அப்பெண்ணின் தந்தையும் கடைக்காரர் மீது புகார் அளித்துள்ளநிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.