பாடசாலை ஒன்றின் வாயிலுக்கு அருகில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
லுணுவிலவில் நிர்வாணமாக காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுணுவில, தெமட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் வாயிலுக்கு அருகில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை சடலம் மீட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வென்னப்புவ தும்மலதெனிய பகுதியைச் சேர்ந்த அசேல பெரேரா என்ற 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம்
இவர் தலையில் பலத்த காயத்துடன் இரத்தம் கசிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளின் தலைக்கவசம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாரவில தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.