உரிமையாளருக்கு வாடகைக்கு தங்கியிருந்தவர் நடத்திய சம்பவம் ; மனைவி, மகளுக்கு நேர்ந்த கதி
வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் இன்று (7) அதிகாலை நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவ்வீட்டின் உரிமையாளர் உயிரிழந்தார்.
சந்தேகநபர் வீட்டின் உரிமையாளருக்கு மேலதிகமாக அவரது மனைவி மற்றும் மகள் மீதும் தாக்குதல் நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகராறு
இந்த தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை (7) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதால் வீட்டில் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது காயமடைந்த பெண் மற்றும் சிறுமி ஆகிய இருவர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.