சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ; பலியான குடும்பஸ்தர்
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.