பாணந்துறையில் அதிர்ச்சி சம்பவம்: அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்!
பாணந்துறை, வெக்கட, பஹங்கம பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் அறையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று (29-05-2023) மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் அறையில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டின் கீழ் தளத்தில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை - தெற்கு பொலிஸார் குறித்த அறையை சோதனையிட்ட நிலையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.