நாயை காப்பற்ற முயன்றவருக்கு நடந்த விபரீதம் ; தீவிரமாகும் விசாரணை
அநுராதபுரம், கல்நேவ - தம்புத்தேகம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நேவ - தம்புத்தேகம வீதியின் 30 ஆம் கிலோமீற்றர் கல் அருகே உள்ள குறுக்கு வீதியில் நேற்று (28) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
இவ்விபத்தில் கல்நேவ, கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நாமல்கமுவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியைக் குறுக்கறுத்த நாயைக் காப்பாற்ற முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.