நெடுந்தீவு இறங்குதுறையில் படகில் ஏற முயன்றவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு பொலிஸார் விசாரணை
நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இன்றைய தினம் பு(10) காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட இருந்த படகில் ஏற சென்றுள்ளார்.
இதன்போது , இறங்குதுறையில் படகுகள் கட்டி இருந்த கயிற்றில் தடக்கியதில் தடுமாறி கடலினுள் விழுந்து நீரில் மூழ்கி காணாமல் போனார்.
உடனடியாக கடற்படை சுழியோடி வீரர்கள் கடலில் குதித்து , தேடிய நிலையில் , நீண்ட நேர தேடலின் பின்னர் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.