பொலிஸ் காவலில் இருந்தவர் உயிரிழப்பு
46 வயது சந்தேக நபர், கந்தேகெட்டிய பொலிஸாரின் காவலில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டு, கந்தேகெட்டிய பிரதேச மருத்துவமனையில் இருந்து மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நவரத்ன முதியன்சேலாகே அஜந்த புஷ்பகுமார, மீகஹகியுல பிரதேசத்தை சேர்ந்தவராவார். மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் இன்று (3) பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏஎஸ்பி வெஹித தேசபிரியவின் அறிவுறுத்தலின் கீழ், மடுல்சிம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிஐ ஹெச்.பி. திசாநாயக்க, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.