காதலனோடு மனைவி ஓட்டம்; 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய கணவர்!
இந்தியாவில் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபர் கிராமத்தில் வசித்து வருபவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உண்டு. மாணிக் அலியின் மனைவி காதலனுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், இருமுறை காதலனோடு ஓடி விட்டார்.
இருமுறை காதலனோடு ஓட்டம்
இருந்தும் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் அவரது மனைவி, தனது காதலனுடன் தொடர்பை தொடர்ந்துள்ளார். இதனையடுத்து, சட்டபூர்வமாக விவாகரத்து பெற முடிவு செய்தார்.
இந்நிலையில், விவாகரத்து கிடைத்ததும், பாலில் குளித்து அதை கொண்டாடினர்.
40 லிட்டர் பாலை ஊற்றி குளித்து அவர் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.