150 சிகரெட் பெட்டிகளுடன் யாழில் சிக்கிய நபர்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 150 சிகரெட் பெட்டிகளுடன் ஒருவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது புதுக்குடியிருப்பு பகுதி சேர்ந்த 45 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த சிகரெட் பெட்டி
குறித்த நபர் பேருந்து நிலையத்துக்கு அருகில் இரண்டு சிகரெட் பெட்டிகளுடன் கைது செய்யப்பட்டு இருந்தார்.
அவரிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையின் போது தீர்வை வரி செலுத்தாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 150 சிகரெட் பெட்டிகள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.