போலி 1000 ரூபாய் நாணயத் தாளுடன் பிடிபட்ட நபர் விளக்கமறியலில்
போலி 1000 ரூபாய் நாணயத்தாள் ஒன்றினை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 06 திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தம்புள்ள, கிம்பிஷ்ச பகுதியை வசிப்பிடமாக கொண்ட 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
சந்தேக நபரான இளைஞன் 21 ஆம் திகதி திங்கட்கிழமை (21) மாலை போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாளினை வழங்கி ஹபரனை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு முட்பட்ட வேளை போலி நாணயத்தாள் என்பதை அறிந்துகொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் ஹபரனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த ஹபரனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பாளித்த இலங்கசேகர அவர்களின் ஆலோசனைப்படி குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விமல் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.