4 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஆபத்தான பொருட்களுடன் ஒருவர் கைது
நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
வண்டுரமுல்லை சேசத மாவத்தையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் சோதனை
சேசத மாவத்தையின் ஊடாக குறித்த நபர் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது
இதனைத்தொடர்ந்து சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அலுமாரியில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 190கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பாணந்துறை 'குடு நிலங்க' குழுவுடன் தொடர்புடைய கும்பலால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை ; வெளியான விபரங்கள்
போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக இதற்கு முன்னரும் 7 தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.