யாழில் ஆலய சிலையை உடைத்தவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரவணை பகுதியில் உள்ள சைவ ஆலயம் ஒன்றின் சிலையை உடைத்து சேதமாக்கியவரை ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த உருவச்சிலை ஒன்று திங்கட்கிழமை (09) அன்று மர்ம நபர்களினால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து ஆலய நிர்வாகத்தினரால் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த ஊர்காவற்துறை பொலிஸார், ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், குறித்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.