பிரான்ஸில் ஈழத்தமிழ்ப் பெண் மதுபோதையில் மீட்கப்பட்டதாகப் பரவும் செய்தி ; வெளியான தகவல்
பிரான்ஸின் Toulouse பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமுக ஊடகங்களில் தெகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதன் உண்மைத்தன்மை பற்றி பிரெஞ்சு பொலிஸாரிடம் இருந்து பல தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பகட்ட விசாரணை
இந்தச் செய்தி பிரெஞ்சு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றும் இது தொடர்பாக பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது துலூஸ் (Toulouse) நகர பிரதான ஊடகங்களோ (La Dépêche, Actu Toulouse போன்ற தளங்கள்) எந்தவொரு உத்தியோகபூர்வ செய்தியையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வதந்தியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.பிரான்ஸில் இத்தகைய உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் நடக்கும்போது, பாதிக்கப்பட்டவர் தொடர்பில் எது வித தகவல்களையும் பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது ஊடகங்களோ ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒருபோதும் பகிரங்கப்படுத்த மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக வலைத்தளங்கள் அல்லது வெளிநாட்டு புலம்பெயர் ஊடகங்களில் மட்டுமே பரவி வரும் இந்தச் செய்திக்கு நம்பகத்தன்மை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் புனையப்பட்டதாக கருதப்படும் இத்தகைய செய்திகளைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.