தமிழர் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது
மட்டக்களப்பு வாகனேரியில் வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் ஏனையோர் தப்பி ஓடி விட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது 1817000 மில்லி லீற்றர் கசிப்பு உட்பட உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நன்பகல் வேளை வாழைச்சேனை பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார வழிகாட்டலில் எஸ்.ஜ.அசங்க தலைமையிலான போதை தடுப்பு பிரிவினர் வாகனேரி கல்கனி எனும் காட்டுப் பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 11 பரல்கள் கொண்ட கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தம் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் உட்பட சந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
இது போன்றதொரு சுற்றி வளைப்பு நடவடிக்கையினை வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்டு பெருமளவு கசிப்பு கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.