யாழில் நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
யாழ்.நகரில் வீடுடைத்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடிய வர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மற்றொருவர் தலைமறைவான நிலையில் தேடப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சுபாஷ் ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி 10 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன. வீட்டில் எவருமில்லாத சமயம் வீடுடைத்து இந்தத் திருட்டு இடம்பெற்றது. யாழ். பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில்,குருநகரைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 தங்கப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகி யுள்ளார். கைதான சந்தேக நபர் நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.