கொழும்பில் உலக வர்த்தக மையத்தில் உள்ளே இரவில் திருடிய நபர் கைது

Sri Lanka Police Colombo Crime
By Sahana Jan 24, 2025 12:54 AM GMT
Report

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் சற்றுமுன் பேருந்தும் லொறியும் மோதி விபத்து

கொழும்பில் சற்றுமுன் பேருந்தும் லொறியும் மோதி விபத்து

குறித்த நபரின் திருட்டுகளின் முடிவில் 'பேட்மேன்' என்று சுவர்களில் எழுதப்பட்ட ஒரு குறிப்பின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 26வது மாடியில் அமைந்துள்ள நான்கு அலுவலகங்களில் கடந்த 17 ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உலக வர்த்தக மையத்தில் உள்ளே இரவில் திருடிய நபர் கைது | Man Arrested Burglary World Trade Center Colombo

இந்த நுணுக்கமான விசாரணையின் முடிவில், ​​சந்தேக நபரால் திருடப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட மூன்று மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களை பொலிஸாரினால் மீட்க முடிந்தது.

விசாரணையின் போது, ​​திருட்டுகள் நடந்த ஒவ்வொரு அலுவலகத்தின் சுவர்களிலும் 'BAT MAN' என்று எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

அதன்படி, உலக வர்த்தக மையத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, கடந்த ​​17 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கட்டிடத்திற்குள் நுழைவதைப் பார்த்து பொலிஸ் அதிகாரிகள் சந்தேகித்தனர்.

சந்தேக நபர் சாவியை எடுத்து, நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து, சுமார் 3 மில்லியன் ரூபா மதிப்புள்ள மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளைத் திருடியது சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.

கொழும்பில் உலக வர்த்தக மையத்தில் உள்ளே இரவில் திருடிய நபர் கைது | Man Arrested Burglary World Trade Center Colombo

திருட்டைச் செய்த பிறகு, ஒவ்வொரு அலுவலகத்தின் சுவரிலும் 'BAT MAN' என்ற வாசகம் எவ்வாறு வந்தது என்ற விடயமும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. சந்தேக நபர் உலக வர்த்தக மையத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பில் அறிந்த ஒருவர் என்று பொலிஸ் அதிகாரிகள் ஊகித்திருந்தனர்.

அதன்படி, அங்கு முன்னர் பணிபுரிந்தவர்களின் பேஸ்புக் கணக்குகளை சோதனை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர், மேலும் 'BAT MAN' படம் அடிக்கடி இடம்பெறும் ஒரு கணக்கு பொலிஸ் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி, சந்தேக நபர் எரித்திரியா வம்சாவளியான சூடானைச் சேர்ந்த 23 வயது காலித் ரியால் முகைதீன் என பொலிஸாரினால் அடையாளம் காண முடிந்தது.

கொழும்பில் உள்ள ஒரு கெசினோ விடுதிக்கு அருகில் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தக மையத்தில் மீன் ஏற்றுமதி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்ததாக குறிப்பிட்டார்.

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச்சூடு

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச்சூடு

அவர் அங்கு பணிப்பாளராக பணியாற்றியதாகவும், அதனால் ஏனைய அலுவலகங்கள், பாதுகாப்பு மற்றும் சாவி சேமிப்பு இடம் பற்றி அறிந்திருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், திருடப்பட்ட பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்று, அந்தப் பணத்தை சூதாட்ட விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தியதாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முச்சக்கரவண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US