கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபரொருவரை அதிரடியாக கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் இன்று (23) செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரால் டுபாய்க்கு 14,060,000 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 10 மில்லியன் இலங்கை ரூபாவும் 20,000 அமெரிக்க டொலர்களும் மீட்கப்பட்டுள்ள்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யபட்ட சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 27 வயதான வர்த்தகர் ஆவார்.
கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.