செயலிழந்த கதிரியக்க இயந்திரம்; புற்றுநோயாளர்கள் அவதி
கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி முதல் ,மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை வழங்கும் இயந்திரம் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
கதிரியக்க சிகிச்சை வழங்கும் இயந்திரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட "லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரம்" பெப்ரவரி 29 ஆம் திகதி செயலிழந்ததாக கூறப்படுகின்றது.
சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை
எனினும் இது வரையில் அது திருத்தப்படவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இதனால் தினமும் 10 - 15 சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இந்த புற்றுநோய் சிகிச்சையை தனியார் வைத்தியசாலையில் பெற, புற்றுநோயாளி ஒருவர் 7 முதல் 17 லட்சம் ரூபா வரை செலவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .