மாலைத்தீவில் பயங்கர தீ விபத்து: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
மாலைதீவு தலைநகர் மாலேயில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் இலங்கையர்கள், இந்தியர்கள் மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்கள் குழு ஒன்று தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல் போயுள்ளனர்.
மீட்பு குழுவினர் அங்கு தங்கியிருந்த 28 பேரை வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 8 இந்தியர்கள் எனவும் ஒருவர் பங்களாதேஷ் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 2 சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை தீ விபத்திற்குள்ளான கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.