சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் ; இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் நுழைந்தார்.

இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் இந்த சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். தனது சொந்த ராசிக்கே சுக்கிரன் செல்வதால், மிகவும் மங்களகரமான மற்றும் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் பார்ப்போம்.

துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமையும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகத்தை விரிவாக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் சுக்கிரனின் அருளால் கைக்கு வந்து சேரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபமும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியும் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொன்னும், பொருளும் குவியும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தை காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
[MDWE ]