தமிழர் பகுதியொன்றில் பெரும் முறைகேடு ; அழுது புலம்பும் மக்கள்
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உண்மையாகவே வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நேரடியாக பார்வையிடவில்லை எனவும், வெள்ள அனர்த்த நிவாரணம் வழங்குவதிலும் முறைகேடுகள் இடம்பெறுகிறது எனவும் முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதி கிராம சேவகர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள்,

முறைகேடு
முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 385 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை எமது கிராம சேவையாளர் நேரில் வந்து பார்வையிடவில்லை.
அவரது கையாட்களை வைத்து தமக்கு பிடித்தவர்களின் பெயர் விபர பட்டியலை எடுத்து, மாவட்ட செயலகம் ஊடாக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளார். இதனை தட்டி கேட்டால் பொலிஸாரை வரவழைத்து மிரட்டுகின்றார்.
இதேபோன்று ஒரு பிரச்சினையை தட்டிகேட்க சென்ற இருவர் மீது தற்போது வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலருக்கு தேவை நிமித்தம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாது.
அவருக்கு பிடித்த ஆட்களுக்கே சலுகை வழங்கப்படுகின்றது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.