திவுலபிட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
திவுலபிட்டி, வெவகொடர பகுதியில் அமைந்துள்ள தும்பு தொழிற்சாலையில் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புப் படைப்பிரிவினர் 4 தீயணைப்பு வாகனங்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம்
கம்பஹா தீயணைப்புப் பிரிவிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களும், நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவிலிருந்து ஒரு தீயணைப்பு வாகனமும் என மொத்தம் 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீயணைப்புப் படை வீரர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களும் தீயை மேலும் பரவாமல் தடுத்து முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.