ஆட்டத்தை ஆரம்பித்த மைத்திரி அணி!
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவின் பதவி விலகலை தொடர்ந்து ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அரச கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இவ்வாறான நிலையில் மறுபுறம் பல்வேறு தரப்பினரும் ரணில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் அரசாங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.