வீட்டைவிட்டு வெளியேறும் மைத்திரி!
புத்தாண்டின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேன அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேசமயம் அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு எங்கு செல்வார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் தெரியவருகிறது.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் உரிமையுள்ள உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட பிரமுகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.