ஜனாதிபதி ரணிலுக்கு உறுதியளித்த மைத்திரி!
சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், (Ranil Wickremesinghe) சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05-08-2022) நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் (Dinesh Gunawardena) பங்கேற்றிருந்தார்.
மேலும், சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தலைமையிலான அணியினரும் ஜனாதிபதியை இன்று சந்தித்து, சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக பேச்சு நடத்தினர்.