ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வரும் முக்கிய பொருள்!
நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரியை வழங்குவதற்கு ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை வழங்குவதற்காக டெண்டர் மூலம் இரண்டு நிறுவனங்கள் அழைக்கப்பட்டு ரஷ்ய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி 6 மாத கால அவகாசத்துடன் முன்பணம் செலுத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்கு நிலக்கரி வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி வழங்க முன்வந்துள்ள நிறுவனம் விலை சூத்திரத்தின்படி நிலக்கரியை வழங்குவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் , முந்தைய விநியோகத்தை விட 4-5 மெட்ரிக் தொன் இயற்கை நிலக்கரியைஅதிகமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது அனல்மின் நிலையத்தில் அக்டோபர் (2022) வரை நிலக்கரி இருப்பதாகவும், புதிய டெண்டரின் படி, அக்டோபர் இறுதியில் நிலக்கரியை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.