வேலுகுமார் எம்.பியை கடுமையாக விளாசிய அமைச்சர் மஹிந்தானந்த!
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கும், விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.
பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் கொண்டு வரப்படாமல், விவசாய அமைச்சுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், விவசாய அமைச்சினால் நான்கு தோட்டங்களின் காணிகள் சுவீகாிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலுமே இவ்வாறு கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டிய-கலபொட 285 ஹெக்டேயர் காணியும், வட்டவளை - மவுஜின் தோட்டத்தில் 43 ஹெக்டேயர் காணியும், ஹந்தானை தெல்தொட்டயில் 40 ஹெக்டேயர் காணியும், தெல்தோட்ட கிரேட்வெலியில் 101 ஹெக்டேயர் காணியும் விவசாயத்துறை அமைச்சினால் சுவீகரிக்கப்பட்டதாக வேலுக்குமார் கூறிய போதே குறித்த விவாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த காணிகள், மொஹமட் இம்தியாஸ் மொஹமட் சாபிக் மற்றும் பெஸ்டியன் நிக்கலஸ் டொன் பிரான்ஸிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அளுத்கமகே இதன்போது தெரிவித்தார்.