மஹிந்தவின் பதவி விலகல் தொடர்பில் நாமல் வெளியிட்ட முக்கிய தகவல்
“பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்சவே (Mahinda Rajapaksa) தொடர்ந்து நீடிப்பார். பிரதமர் பதவிக்கு நான் நியமிக்கப்படவுள்ளேன் என்று வெளியான தகவல் வதந்தியாகும்.” என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவது குறித்து பரிசீலித்து வருகின்றார் எனவும், புதிய பிரதமராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“விரைவில் பொருளாதார நிலைமைகள் மீளவும் கட்டமைக்கப்பட்டு அரசியல் நிலைமைகளும் சுமுகமாக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.
என்னைப் பொறுத்தவரையில் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்குக்கூட கிடையாது” – என்றார்.