ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள்: நேரில் சென்று பார்த்த மஹிந்த மனைவி!
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் நைன்வெல்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இன்று (25) பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை ஒரே பிரசவத்தில் இந்த ஆறு குழந்தைகளும் பிறந்துள்ளதுடன், அவர்களில் மூவர் ஆண் குழந்தைகள், மூவர் பெண் குழந்தைகள் ஆவர்.

திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க மரவனாகொட தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரிப்பதற்காக சென்ற பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், நைன்வெல்ஸ் வைத்தியசாலையின் சிரேஷ்ட செயல்பாட்டு முகாமையாளர் திரு.சுசந்த பீரிஸ் உள்ளிட்ட ஊழியர்களினால் வரவேற்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் பிரதமரின் பாரியார் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.
குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமரின் பாரியார், எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.