விசாரணைக்கு வரமறுக்கும் முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபகக்ஷ மனைவி
தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று (27) பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது எனவும் பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக இரண்டு வார கால அவகாசம் தேவையெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளதாகவும் கொழும்பு தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
வங்கி கணக்கு ஒன்று தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் செவ்வாய்க்கிழமை (27) முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வங்கி கணக்கு தொடர்பில் விசாரணை
ஷிரந்தி ராஜபக்ச இன்று (27) விசாரணைக்காக ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கால அவகாசத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.