தமிழ் அமைச்சருடன் பொன்னியின் செல்வன் படத்திற்கு சென்ற மஹிந்த!
தமிழ் அமைச்சரான சுரேன் ராகவனுடன் , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ பொன்னியின் செல்வன் திரைபடத்திற்கு சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியாருடன் பொன்னியன் செல்வன் திரப்படத்தை படத்தைப் பார்வையிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மஹிந்த பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அவருடன் வடமாகாண முன்னாள் ஆளுநரும் , அமைச்சருமான சுரேன் ராகவனும் உடன் சென்றுள்ளார்.
அதேவேளை தமிழர்களின் வீர வரலாற்றை எடுத்துக்கூறும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ்ர்களை கொன்றொளித்த மஹிந்த சென்று பார்வையிட்டுள்ளமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமானது இலங்கையின் வரலாற்றுடனும் பின்னிப்பிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.