பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட மனைவியுடன் திரையரங்கிற்கு சென்ற மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியாருடன் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்வையிட கொழும்பிலுள்ள திரையரங்கு ஒன்றுக்குச் சென்றுள்ளார்.
கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய படைப்புதான் பொன்னியின் செல்வன்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி உலக அளவில் வெளியானது.
இத்திரைப்படத்தின் முதன்மை நடிகர்கள் விக்ரம் கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிசா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ச்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா மற்றும் துணைநிலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியும் கொழும்பில் உள்ள திரையரங்கு ஒன்றில் இந்த படத்தை பார்க்க சென்றுள்ளனர்.
மேலும் மஹிந்தவுடன் கலாநிதி சுரேன் ராகவன் (Suren Raghavan) அவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டுள்ளார்.