அடிபட்ட சிறுவனை தேடிச்சென்ற மஹிந்தவின் மனைவி
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்த சிரந்தி ராஜபக்ஸ
கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுவன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனை சிரந்தி ராஜபக்ஸ நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.