மஹிந்தவின் முழு ஆதரவு ரணிலுக்கு!
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைவோம் எழுவோம் களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, அங்கு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, கடந்த மே மாதம் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற அறிக்கைகளே காரணம் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சியும் கூட்டத்தில் உரையாற்றியதுடன், அரசியல் பின்னணி இல்லாதவர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை அடைவதால் குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
கரிம உர சாகுபடிக்கு திரும்புவதற்கான முடிவும் இதேபோன்றது என்று அவர் கூறினார்.
பொது பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.