ஜனாதிபதி ரணிலை அவசரமாக சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் (Mahinda Rajapaksa) இடையில் அவசர சந்திப்பு இடம்பெற்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கலந்துரையாடல் இன்று (17-10-2022) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நேரம் கலந்துரையாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் (Basil Rajapaksa) இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்துள்ளமையானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.