இலங்கையில் முடிவுக்கு வரும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆட்டம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய சந்தா்ப்பத்தில் பொதுஜன பெரமுன அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமற்றது என கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று சுட்டிக்காட்டியதால் இந்தக் கூட்டத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
முதலில் கட்சியை ஒழுங்கமைத்து, பின்னர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கூட்டங்களை நடத்துவதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது இதனை சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.