மகிந்த ராஜபக்சவை தேடி சென்ற இந்தியத் துணை உயர்ஸ்தானிகர்
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னியை புதன்கிழமை (25) சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்ததாகவும், இதில் இருதரப்பு உறவுகள் குறித்தும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ராஜபக்ச தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று, கலாச்சார மற்றும் மத ரீதியான பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நட்புறவு, பரஸ்பர நலனுக்கான விரிவான ஒத்துழைப்பாக வளர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டிட்வா' (Ditwah) சூறாவளியின் போது, இலங்கைக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு ராஜபக்ச தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய ஆதரவானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.