மொட்டு கட்சி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மலரும்!
மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையில், மொட்டு கட்சி ஆட்சி, எதிர்காலத்தில் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (24-09-2022) நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் கண்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன நடைபெறுவதற்கு இன்னும் காலம் உள்ளது.
உள்ளாட்சி சபைத் தேர்தலும் அடுத்த வரும் மார்ச்சில்தான் நடைபெறும். மேலும், டிசம்பர் ஆகும்போது நாட்டு பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மொட்டு கட்சி அரசாங்கம் எதிர்காலத்தில் உருவாகும்.” – எனவும் மஹிந்தானந்த குறிப்பிட்டுள்ளார்.